Categories
அரசியல்

IPL Mini Auction 2023: ஒட்டுமொத்த அணியையும் திரும்பி பார்க்க வைத்த 15 வயது இளம் வீரர்…. யார் அவர்….????

உலகமே வியந்து பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடங்குவதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 45 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றாலும் பத்து அணிகள் கவனமும் தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 வயது சுழல் பந்துவீச்சாளர் அல்லா முகமது கசன்ஃபர் மீது உள்ளது.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலத்தில் இந்த 15 வயது சிறுவன் பதிவு செய்துள்ளார். இந்த வருடம் மினி எழுத்தில் மிகக் குறைந்த வயதுடைய இளம் வீரர் இவர் தான். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கிலும் தன்னுடைய பெயரை பதிவு செய்து இருந்தபோது இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இருந்தாலும் மீண்டும் இந்திய பிரீமியர் லீக்கில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார். இவர் மிகவும் திறமை வாய்ந்த ஸ்பிங்கர் ஸ்பின்னர். இவரின் அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய்.

இவர் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்த பிறகு பேசுகையில், இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் எனக்கு விருப்பமான பந்துவீச்சாளர். அவரின் பன்முகத்தன்மையை நான் விரும்புகின்றேன். நான் எப்பொழுதும் அவரை என்னுடைய உத்வேகமாக கருதுகின்றேன் என்று கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த 15 வயது சுழல் வந்து வீச்சாளர் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |