Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் பிடித்த கார் ஓட்டுநர்…. லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் பலி…. கோர விபத்து…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியில் கைல் தாமஸ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கிளவ்மென்ட் ஜோஸ்வா(18) என்பவரும் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். நேற்று மாலை தாமஸ் மற்றும் ஜோசுவா ஆகிய 2 பேரும் தாம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது தாம்பரம் சானடோரியம் அரசு சித்தா மருத்துவமனை அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் டிரைவர் சடன் பிரேக் பிடித்தார்.

அப்போது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கார் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்தனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த 2 பேரும் பின்னால் வந்த மினிலாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |