Categories
இந்திய சினிமா சினிமா

“முதல்ல சமந்தா, சாய் பல்லவி, ராஷ்மிகா இப்ப தீபிகா”…. பெண்கள் மீது இவ்வளவு வெறுப்பா…..? கொந்தளித்த நடிகை ரம்யா…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம், தனுசுடன் இணைந்து பொல்லாதவன், அர்ஜுனுடன் கிரி, சிம்புவின் குத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திவ்யா தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை சமந்தா விவாகரத்து செய்து கணவரை பிரிந்ததும் அவருக்கு எதிராக அவதூறுகள் பரவியது. இதே போன்று நடிகை சாய் பல்லவி அரசியல் பற்றிய கருத்தை சொன்னதற்காக அவதூறு பரவியது.

அதன் பிறகு நடிகை ராஷ்மிகா தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியதற்காக கன்னட படங்களில் நடிக்க கூடாது என்று அவதூறு கிளம்பியது. தற்போது நடிகை தீபிகா காவியுடை அணிந்து கவர்ச்சியாக படத்தில் நடித்துள்ளார் என்பதற்காக அவதூறு கிளம்பியுள்ளது. பெண்கள் இப்படி அவதூருக்கும், கேலிக்கும் ஆளாகின்றனர். அவர்களுக்கு எதையும் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அது பெண்களின் அடிப்படை உரிமை. பெண்கள் துர்காவின் வடிவம். பெண் வெறுப்பு என்பது தீமையானது. நாம் அதை எதிர்த்து போராட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை ரம்யாவின் பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |