Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித்தை லெஜன்ட் அண்ணாச்சியை வைத்து கலாய்த்த ப்ளூ சட்டை”‌….. நம்ம தலைக்கு வந்த சோதனையை பாத்தீங்களா…..!!!!!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவருடைய விமர்சனத்தை பார்த்த பிறகு தான் பலரும் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு எப்போதும் படங்கள் தொடர்பான விமர்சனங்களை வெளியிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் படங்கள் பற்றி நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் 2022-ம் ஆண்டு முடிவடையும் நிலையில் திரையுலகில் நடந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் லெஜெண்ட் சரவணன் மற்றும் நடிகர் அஜித்தை ஒப்பிட்டு தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டது தல ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் டிரைலர் வீடியோவை 25 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், தி லெஜன்ட் படத்தின் டிரைலர் வீடியோவை 32 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். அதோடு லெஜெண்ட் சரவணன் பவரை புரிந்து கொள்ள முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Categories

Tech |