Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குப்பை தொட்டி வைக்காத கடைகளுக்கு அபராதம்”… மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருந்து தினமும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் தென்னை, மரக்கழிவுகள் போன்ற தோட்ட கழிவுகளானது நார்கள் மற்றும் பயோ உருளைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதேபோல பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள கடைகளில் எளிதில் தரம் பிரிக்கும் விதமாக மக்கும்  குப்பை, மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 100% அனைத்து கடைகளிலும் இரண்டு குப்பை தொட்டிகள் வைத்ததை உறுதி செய்யும் விதமாக மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இரண்டு குப்பை தொட்டிகளை வைக்காத கடை உரிமையாளர்களிடம் குப்பை தொட்டிகளை உடனடியாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு,  ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 800 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |