இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அமைச்சர் பதவியேற்றதும் அவர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதையடுத்து முதன்முறையாக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார்.
அதாவது ஆந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள செல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“வரும் மக்களவைத் தேர்தலுக்கு தற்போது இருந்தே நாம் பரப்புரையை தொடங்க வேண்டும். மக்களவை தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க வெற்றியடையும். இதன் காரணமாக தற்போதே தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.