Categories
தேசிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை வந்தால் உடனே இத செய்யுங்க….. நிர்மலா சீதாராமன் அட்வைஸ்…!!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கி போன்ற மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார மந்த நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற FICCI கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா தொழில்நுட்பத்தில் அரசின் அணுகு முறையால் முதலிடத்தில் இருக்கிறது. சமீப காலமாக மேற்கு நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் நம் நாட்டில் ஏற்றுமதி பாதிக்கும். ஆனால் வேறு இடங்களுக்கு நகரக்கூடிய முதலீடுகளை நம்மால் ஈர்க்க முடியும். அங்கிருந்து வெளியேறக்கூடிய முதலீட்டாளர்களை இந்தியா ஈர்ப்பதற்கு இது ஒரு நல்ல நேரம்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு நாடுகளில் பொருளாதாரம் அந்த நிலை ஏற்படும்போது உற்பத்தியாளர்கள் இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் மனித வளத்தை பரிசீலிப்பார்கள் என்பதால் அவர்கள் இங்கு உற்பத்தியை தொடங்கக்கூடும். நாம் உற்பத்தியில் கவனம் செலுத்துவதோடு, புதிய சேவை துறைகள் மற்றும் ஐடி துறைகளிலும் கவனம் செலுத்தி உற்பத்தியை வலுப்படுத்த வேண்டும். மேலும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டால் அங்கிருந்து முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டுவந்து நம் உற்பத்தியை பலப்படுத்தலாம் என்று கூறினார்.

Categories

Tech |