உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்ப்ரஸ்வேயில் 2 பேருந்துகள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories
“2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து”… 3 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!
