அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சிநிர்வாகிகள், வெப்பேரியிலுள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிவிப்பில், அ.தி.மு.க தலைமை செயலகம் லெட்டர் பேட் மற்றும் சீலுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஓபிஎஸ் ஏற்பாடு செய்திருப்பதன் பின்னணியில் மேலிடம் உள்ளதாக எடப்பாடி அணி சந்தேகிக்கிறது.
அ.தி.மு.க பொதுக் குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் சில வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், ஓபிஎஸ்-ன் இந்த முடிவு எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஓபிஎஸ்-ஐ எப்படி சமாளிப்பது..?, எப்படி அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்..? என்ற யோசனையில் எடப்பாடி பழனிசாமி இறங்கி இருக்கிறார்..