Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரு!…. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |