Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் அளித்துள்ளதால் அதனை தடுக்கும் விதமாக பகல் நேரங்களில் மட்டுமே பொருட்கள் இறக்கப்படும் எனவும் அப்போதுதான் தரமற்ற பொருட்கள் இருந்தால் அதனை உடனடியாக மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |