Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதேசி….!! திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. இவர்களுக்கு மட்டும் தான்…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் கலந்து கொள்ள  நமது மாவட்டம் மட்டும் இல்லாமல்  வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.

இதனால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் இதற்கு பதிலாக 7-ஆம்  தேதி வேலை நாளாக அறிவிக்கப்படும்” என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |