வாலிபர் ஒருவர் தனது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள கல்கஜி பகுதியில் மண் சிங்-பூஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மண் சிங், பூஜா ஆகிய 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
அதேபோல் மண் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூஜா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற மண் சிங் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். மேலும் தனது குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளார். பின்னர் தானும் குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் மண் சிங் மீது 307 கொலை முயற்சி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.