தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலும், சிங்கமுத்துவும் சேர்ந்து நடிக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகும் இவர்கள் இருவரும் இணைந்த நகைச்சுவை காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சிங்கமுத்துவிடம் கேட்டதற்கு “நாங்கள் 2 பேரும் நேரில் சந்தித்து பேசினால் இப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும். யாரோ கூறியதை கேட்டுக் கொண்டு என் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை சுமத்தினார். ஆனால் அதையெல்லாம் நிரூபிக்க முடிந்ததா..? அனைத்துமே பொய் தான். தற்போதுகூட நான் அவரோடு உட்கார்ந்து பேசத் தயாராக இருக்கிறேன்” என கூறியிருக்கிறார்.