Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பூ வீட்டில் மரணம்..! “என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது”… சோகமாக பதிவு..!!!

நடிகை குஷ்பூவின் அண்ணன் இன்று காலமானார்.

தமிழ், தெலுங்கு என்ன பல மொழிகளில் முன்னணி நடிகையாக 80,90-களில் வலம் வந்தார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும்  இருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் தனது மூத்த சகோதரர் அபூபக்கர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் சென்ற நான்கு நாட்களாக வென்டிலேட்டரில் இருந்து வருவதாகவும் நேற்று தான் அவரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகையால் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் குஷ்புவின் அண்ணன் அபூபக்கர் இன்று உயிரிழந்தார். இதனை குஷ்பூ தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் சொல்வது போல் வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என வருத்தத்துடன் பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |