கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ வரும் நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்து விட்டு சென்று விடுகின்றது.
ஆனால் மீண்டும் மாணவர்களை அழைப்பதே கிடையாது. பிறகு இது குறித்து விசாரித்தால் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என புகார்கள் எழுகின்றன. இது போன்ற போலி நிறுவனங்களை தடுப்பதற்கு அந் நிறுவனங்களின் மூன்று ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்த பிறகே பல்கலைக்கழக, கல்லூரி நிர்வாகங்கள் அனுமதி தர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.