Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 21ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் நாளை மற்றும் நாளை மறுநாள் பரவலாக பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |