தமிழகத்தில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என மீண்டும் பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஜனவரி 2ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.