Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் முதல்வர் அண்ணா!… உருகி உருகி கடிதம் எழுதிய எம்எல்ஏ…. பதட்டத்தில் அதிமுக…. நொறுங்கிப் போன எடப்பாடி….!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கட்சிக்குள் மாறி மாறி அணிமாற சிலர் வேறு கட்சிக்கும் தாவுகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். அதன்பிறகு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே. வெங்கடாசலம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. கந்தசாமி தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்ததோடு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் டிட்கோ சார்பில் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், எம்எல்ஏ வி.பி கந்தசாமி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை எம்எல்ஏ கந்தசாமி பொதுமக்களிடம் காண்பித்தார்.

அதில் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக முதல்வரை அண்ணன் என்று குறிப்பிட்டிருப்பது தான் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பாக எம்எல்ஏ கந்தசாமி சின்னங்கள் தான் வேறு. ஆனால் எண்ணங்கள் ஒன்றுதான் என்று  ஒரு பொது நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது முதலமைச்சரை அண்ணன் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |