Categories
தேசிய செய்திகள்

வார்த்தையால் சொல்ல முடியாத மகிழ்ச்சி… அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளா  மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில்  அமைந்துள்ள சூரநாடு மின்வாரியத்தில் ரெகு, விஜீ என்ற 2  ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து   வந்துள்ளனர். அப்போது அணில் ஒன்று அங்கு அமைந்துள்ள மின்கம்பியில் நின்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிலை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அணில் நடுரோட்டில் விழுந்துள்ளது. இதனை பார்த்த அவர்கள் அணிலுக்கு பலமுறை சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின்னர்  அணில் கண் விழித்துள்ளது.

பின்னர் அணிலுக்கு  தண்ணீர் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அணில் அங்கிருந்து சென்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ” அந்த அணில் அங்கிருந்து செல்லும்போது எங்களை திரும்பி பார்த்து நன்றி கூறிவிட்டு செல்வது போல் சென்றது. இந்நிலையில்  ஐந்தறிவு படைத்த உயிரினும் ஒன்று எங்களை  நோக்கி நன்றி கூறியது சொல்ல முடியாத அளவுக்கு  மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது”என அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |