Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! போலீஸ் வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திருடர்கள்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்….!!!!!

 வாகனத்தை திருடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வாகன திருட்டுகள் நடைபெற்று வருகிறது. தங்களது வாகனத்தை இழந்த மக்கள் காவல் நிலையங்களில் தினம் தோறும் புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யும் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு  சூரியபேட்டை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த 2  பேர் வாகனத்தை அங்கிருந்து திருடிச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் அந்த வாகனம் கோதாடா மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று வாகனத்தை கைப்பற்றினர். ஆனால் கொள்ளையர்கள் சிக்கவில்லை.  அந்த 2 பேரையும் போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |