Categories
தேசிய செய்திகள்

சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண்…. மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்த சோகம்…. பரபரப்பு….!!!!

ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஒரு பெண் தன் சிறுநீரகத்தை ரூபாய்.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார். அப்பெண் கடனை அடைப்பதற்காக தன் சிறுநீரகத்தை விற்க முயன்ற போது மோசடி செய்பவர்களிடம் ரூ.16 லட்சத்தை இழந்தார். இதையடுத்து உதவிகோரி அந்த பெண் போலீஸ் நிலையத்தை அணுகியதை அடுத்து இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்தது.

அப்பெண் நர்ஸிங் மாணவி எனவும் அவரது தந்தையின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அந்த தொகையை திரும்ப தன் தந்தையின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய விரும்பிய பெண், வேறு வருமானம் இல்லாததால் தன் சிறுநீரகங்களில் ஒன்றை விற்க முடிவு செய்தார். இதற்கிடையில் தந்தையின் புகாரின்படி சிறுமியை அவரது நண்பரின் வீட்டில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

Categories

Tech |