மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து போலி இணையதளம் பதிவு கட்டணம் வசூல் செய்கின்றது. கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது cbse.gov.in என்ற இணையதளம் தான் அதிகாரபூர்வ இணையதளமாகும்.
பின்வரும் https://cbsegovt.com என்ற இணையத்தளம் போலியானது என்று PIB ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மாணவர்கள் பணம் கொடுத்து அட்மிஷன் பேப்பர்களை பெற சொல்வது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. இது குறித்து மாணவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாணவர்களை ஏமாற்றும் விதமாக இப்படி ஒரு மோசடி அரங்கேறி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.