Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் சிறப்பு சலுகைகள்…. உடனே முந்துங்கள்….!!!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியானது  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கடனில் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி 0.15 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு எஸ்பிஐ வங்கியில் பொதுவாக வீட்டு கடன்களுக்கு 8.55 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது சிறப்பு சலுகையாக வட்டி விகிதமானது 8.40% முதல் 9.05 சதவீதம் வரை விதிக்கப்படும்.

அதோடு வீட்டு கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தையும் எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் எனில் உங்களுடைய சிபில் ஸ்கோர் நல்ல முறையில் இருக்க வேண்டும். உங்களுடைய சிபில் ஸ்கோரை வைத்தே வீட்டுக் கடனுக்கான வட்டி தீர்மானிக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகையின் போது வீட்டு கடன்களுக்கான வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்த நிலையில் தற்போது ஜனவரி 31-ஆம் தேதி வரை வீட்டு கடன்களுக்கான வட்டி சலுகைகள் தொடரும் என்று எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |