Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திண்டுக்கல்லில் பொதுநுாலகத் துறை சார்பாக “நூலக நண்பர்கள் திட்டம்” தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைத்தனர்.

இதையடுத்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது “நுாலக நண்பர்கள் திட்டம் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதல் முறையாக துவங்கப்படுகிறது என்று கூறினார்.

அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது “வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அடிப்படையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |