பொருளாதாரம், கல்வி, மருத்துவம், ஆளுமை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களின்பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்தியா டுடே ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. நம்பர்-1 CM என்பதை விட நம்பர்-1 TN என்பதில் தான் பெருமை என சமீபத்தில் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இரண்டிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி இருப்பதையும், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலத்திலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அது மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி சிறந்த மாநிலமாக தமிழகம் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு இப்படி ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்றால் அது தமிழக அரசின் துரிதமான செயல்பாடுகளில் தான் காரணம் என்று கூற முடியும்.