தென்னிந்திய சினிமா மற்றும் வட இந்திய சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருகிறார்கள். நாள் முழுவதும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதோடு, காலையில் போடும் இரசாயனம் கலந்த மேக்கப்பை மாலையில் தான் கலைக்கிறார்கள். ஒருவேளை படம் தோல்வியடைந்தால் மன ரீதியிலான பிரச்சனைகளையும் நடிகைகள் சந்திக்கிறார்கள். அதன்பிறகு திருமணம் செய்து கொள்வதில் கால தாமதம், திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து போன்ற பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கும் நடிகைகள் ஆளாகின்றனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் மனிஷா கொய்ராலா மது குடிக்கும் பழக்கம் தனக்கு இருந்ததால் புற்றுநோய் வந்ததாக தன்னுடைய சுயசரிதையில் கூறியுள்ளார். அதன் பிறகு நடிகை கௌதமி, நடிகை சோனாலி பிந்த்ரே, மம்தா மோகன்தாஸ், நடிகை ஹம்சா நந்தினி என பலருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். சில நடிகைகள் புற்று நோயால் தங்களுடைய உயிரை கூட இழந்துள்ளனர்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் தனக்கு மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ஜி நோய் இருப்பதாக கூறியிருந்தார். இதேபோன்று நடிகை சுருதிஹாசன் தான் ஹார்மோன், பிசிஓஎஸ், எண்டோ மெட்ரியாசிஸ் போன்ற உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். அதன் பிறகு நடிகை பியா மற்றும் பூனம் கவுர் ஆகியோரும் சமீபத்தில் நானும் சமந்தாவை போன்ற அரியவகை நோயால் அவதிப்பட்டேன் என்று கூறினார்கள்.
இந்த நடிகைகள் மட்டுமின்றி பிரபல நடிகர் வருண் தவானும் vestibular hypo function என்னும் அரிய நோயால் தான் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதால் தான் ஆரோக்கியமுடன் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் சினிமாவில் டாப் நடிகர், நடிகைகளாக வலம் வருபவர்கள் இப்படி அரியவகை நோயினால் பாதிக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.