காலை வேளையில் சாப்பிட முடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் அடிப்படையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்.
சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில் காலை உணவு திட்டம் பற்றி சமூக செயற்பாட்டாளர் வி.கே.தனபாலன் கூறியிருப்பதாவது “தற்போது கொடுக்கப்படும் காலை உணவு திட்டம் பள்ளி மாணவர்களின் ரத்தஓட்டத்தை அதிகரிக்கும்.
இதற்கிடையில் பசி வந்தால் குற்ற உணர்வுகள் மட்டுமே வரும், நல்ல உணர்வுகள் வராது. ஆகவே குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல மனநிலையுடன் வளர இந்த காலை உணவு திட்டம் கண்டிப்பாக உதவும். இதை சரியான முறையில் மாணவர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டியது அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் கடமை” என்று கூறினார்.