Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான சூப்பர் உத்தரவு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் +2 வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்காமல் இடைநிற்றலை மேற்கொண்ட மாணவர்களுடைய விவரங்கள் சேகரிக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு மீண்டும் சிறப்பு வகுப்பு அல்லது பள்ளிகள் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்படும். ஒரு மாணவர் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் 30 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றாலும், அதிகமாக விடுமுறை எடுத்தாலும் அல்லது பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளாக இருப்பினும் இவர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் என்றே கருதப்படுகிறார்கள்.

அந்த வகையில்  2022-2023ம் ஆண்டுக்கான கல்வியாண்டில் 1 முதல் +2 வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அந்த விவரங்கள் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பணியாற்ற வேண்டும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலம் குழு அமைத்து ஜன., 11 வரை இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது

Categories

Tech |