Categories
மாநில செய்திகள்

“எந்த இசையாக இருந்தாலும் அது தமிழிசையாக இருக்க வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் வைத்த திடீர் வேண்டுகோள்….!!!!!

சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96-ம் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். இந்த மியூசிக் அகாடமியில் மார்கழி மாதம் நடைபெறும் இசை கச்சேரிகளில் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெற உள்ள நிலையில், 4 இசைக் கச்சேரிகள் நடைபெறும் மார்கழி இசை திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கடந்த 1975-ம் ஆண்டு மற்றும் 1996-ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கலந்து கொண்ட நிலையில், தற்போது நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அதன் பிறகு இது போன்ற மியூசிக் அகாடமியில் தமிழிசைக்கும், தமிழ் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பாடல்கள் இது போன்ற மேடைகளிலாவது ஒலிக்க வேண்டும். இந்நிலையில் பக்தி இசையாக இருந்தாலும், திரையிசையாக இருந்தாலும், மெல்லிசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும் அது தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

மொழி இருந்தால்தான் கலை இருக்கும் என்பது போல், இசை வளர்த்தல் என்பது தமிழ் வளர்த்தல் மற்றும் கலை வளர்த்தல் என்பதை அனைத்து கலைஞர்களும், கலை அமைப்புகளும் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் நான் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நிலையில் எவ்வித பிரச்சனையும், பரபரப்பும் இல்லாமல், அதாவது ஆங்கிலத்தில் சொல்லப் போனால் எந்த டென்ஷனும் இல்லாமல் நான் கலந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி என்றால் அது இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் தான் என்று கூறினார்.

Categories

Tech |