தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது.
அவ்வகையில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி செல்லா அல்லது இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் அந்த விவரங்களை அடிப்படையில் குழந்தைகளின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் ஜனவரி 31ஆம் தேதி வரை இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.