நாமக்கல்
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்.
திருப்பூர்
உடுமலை அடுத்த மடத்துக்குளம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீரநாயக்கன்பட்டி, கடத்தூர், செங்கண்டி புதூர் மற்றும் கருப்புசாமி புதூர், அ.சு புத்தூர், எஸ்.ஜி. புதூர், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூர், மடத்தூர்,
மயிலாபுரம், நல்லெண்ண கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
மரக்காணம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், வடஅகரம், திருக்கனுார், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, கீழ்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் மின் வினியோகம் இருக்காது.
மதுரை
இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரமங்கலம், கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், அய்யம்பட்டி, செக்கான கோவில்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, மேலபெருமாள்பட்டி, மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், கல்புளிச்சான்பட்டி, நடுவூர், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, மம்மூட்டிபட்டி, ஜோதிமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகள்.
சேலம்
தேவூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரசிராமணி, செட்டிப்பட்டி, மயிலம்பட்டி, அம்மாபாளையம், ஓடசக்கரை, காணிலாம்பட்டி, புல்லாகவுண்டம்பட்டி, அரியகாடு, மாமரத்துக்காடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.