கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது நபர் கால் ரெட்டி. இவர் சங்கரெட்டி மாவட்டம் கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கிராம பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் கிராம பஞ்சாயத்து தலைவராவதற்கு பத்தாவது வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று அரசு புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே கால் ரெட்டி பத்தாம் வகுப்பு படித்து பாஸ் செய்துள்ளார். 70 வயது நபர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கும் சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.