ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்காததால் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தப்பி விடுவதாக மனு அளிக்கப்பட்டது. லஞ்ச வழக்கில் அரசு ஊழியர்களை தண்டிப்பது தொடர்பான வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் லஞ்சப் புகார் அளித்த நபர் இறந்துவிட்டாலோ, பிறழ்சாட்சியாக மாறினாலோ, பிற சாட்சியங்களை கொண்டு விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.