உலக சுகாதார மையத்தின் தலைவர் அடுத்த வருடத்தில் கொரோனா தொற்று உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.
மூன்று வருடங்களாக உலக நாடுகளை கொரோனா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன. தற்போது வரை உலகளவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு பலியாகி உள்ளது.
இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்றுக்கு சர்வதேச சுகாதார அவசரநிலை அவசியமா? என்பது பற்றி தீர்மானிப்பதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பாக சில மாதங்களுக்கு ஒரு தடவை ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் உலக சுகாதார மைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்திருப்பதாவது, அடுத்த வருடத்தில் நாம் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் அதிகம்.
வருங்காலத்தில் கொரோனா போன்ற நோய் பரவல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார். மேலும், அடுத்த வருடத்திலிருந்து கொரோனா தொற்று பரவலை உலகளவில் அவசர நிலையாக கருதக்கூடிய தேவை இருக்காது என்று நம்பிக்கை கூறியிருக்கிறார்.