Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு அரசு பத்திரங்கள் விற்பனை… நிதித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற டிசம்பர் 20, 2022 அன்று இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கூறியதாவது, போட்டி ஏலகேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணிகுள்ளாகவும், போட்டி அற்ற ஏல  கேட்புகள் முற்பகல் 10:30 மணியில் இருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் டிசம்பர் 20, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |