Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… கர்ப்பமாக இருந்ததை அறியாமல் பிரசவித்த பெண்… பெரும் அதிர்ச்சி…!!!!!

ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் தமாரா எனும் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது தமாராவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் வழியில் துடித்துள்ளார். இதனையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியோனா என்ற பெண் தமாராவை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த 2 மருத்துவர்கள் மற்றும் 1 நர்சும் உதவிக்கு சென்றுள்ளனர். அப்போது தனக்கு என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் வலியுடன் தவித்துக் கொண்டிருந்த தமாராவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தமாரா ஆச்சரியத்தில் உறைந்து போனார். இதனையடுத்து ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய நிலையில் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் தமாரா மற்றும் அவரது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையே தமாரா தன்னுடைய  பிரசவத்தின் போது தனக்கு மிகவும் உதவியாக இருந்த சக பயணியான மாக்சிமிலியோனாவின் பெயரை சூட்டி உள்ளார்.

Categories

Tech |