Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடகாவில் மால், திரையரங்குகள் ஒருவாரம் மூடல்!

கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் தியேட்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கேரளாவில் 16 பேர் என மொத்தம் 74 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஒரு முதியவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், பப்புகள், மால்கள் உள்ளிட்டவைகளை ஒருவாரத்திற்கு மூட முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகளையும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |