அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நமது பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க நல்ல திறமையான ஆசிரியர்கள் தேவை. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பி.ஏ., எம்.ஏ ஆகிய பட்டப்படிப்புகளை தமிழில் படித்திருக்க வேண்டும். அதில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண் நல்லது அதற்கு இணையான கிரேடு இருக்க வேண்டும்.
மேலும் ஸ்லெட், நெட் உள்ளிட்ட ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ் நகல்களுடன் ஸ்கேன் செய்து pdf வடிவில் dirtamildvt @anna university.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின்னர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.