திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,விரைவில் உதயநிதி முதல்வர் ஆவார் என்று அதிமுக MLA கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் பேசிய அவர், “உதயநிதிக்கு பட்டாபிஷேக விழா கிடையாது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா” என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதயநிதி முதல்வர் ஆகிவிடுவார் என்று பேசிய கடம்பூர் ராஜூ, பெரியாருக்கு கொள்கைகளை வகுத்துக் கொடுத்ததே உதயநிதிதான் என்று கேலி செய்தார்