இந்தியாவில் பல்கலைக்கழகத்தின் கல்வியை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை இடவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல்கலைக்கழக மானிய குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி இளங்கலை படிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. தற்போது மூன்று வருடங்களைக் கொண்ட இளங்கலை பட்டப்படிப்பை நான்கு வருடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூன்றாண்டு இளங்கலை அல்லது நான்காண்டு பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும். அதே சமயம் இந்த நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் அடுத்ததாக முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்ளாமல் நேரடியாக phd படிப்பை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.