தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் என்பதை தாண்டி பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக சினிமாவில் வலம் வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான கானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார்.
அதாவது சேலம் மாவட்டம் சின்னம்பட்டி பகுதியில் பிறந்தவர் நடராஜன். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். எளிமையான குடும்பத்தில் பிறந்த நடராஜன் தன்னுடைய திறமையால் இந்திய அணியில் தேர்வாகி விளையாடி வரும் நிலையில், தற்போது காயம் காரணமாக விலகி இருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதோடு அந்த படத்தையும் இயக்க இருக்கிறார். இந்த தகவலை நடராஜன் கூறியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.