Categories
தேசிய செய்திகள்

உலகம் சுற்றிப்பார்க்க சென்ற வாலிபருக்கு…. வழியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்….!!!!!

பஞ்சாபிலுள்ள மோதிநகர் போலீஸ் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “என் பெயர் எஸ்பின் (Espin) ஆகும். நான் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றி வருகிறேன். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த சில நபர்கள் என் மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

அதில் என் கிரெடிட் கார்டுகள் இருக்கிறது. இதற்கிடையில் நான் சைக்கிளில் சென்றதால் என்னால் அவர்களை துரத்தி பிடிக்க இயலவில்லை. ஆகையால் எனக்கு உதவவேண்டும்” என புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் கிரெடிட் கார்டுகளுடன் கூடிய மொபைல் போனை பறித்துச்சென்ற மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |