Categories
தேசிய செய்திகள்

கவர்ச்சியின் உச்சம்….!! தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்…. மத்திய பிரதேச மந்திரி கடும் கண்டனம்….!!!!

பிரபல பாலிவுட் நடிகையின் படத்திற்கு  பலர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவரும் “பதான்” என்ற  திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியாகிறது. இதில்  தற்போது பேஷரம் ரங் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடல் ஒரே நாளில் 1.9 கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இந்த பாடலில் தீபிகா படுகவர்ச்சியாக நடித்துள்ளார். ஆனால் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், கடும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு தீபிகா தனது வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதலாக வாங்கியுள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி  கூறியதாவது, “பதான் திரைப்படத்தில் பல தவறுகள் உள்ளது. இதனால் இந்த படம் மக்கள் மனதில் நச்சு தன்மையை உருவாக்க அடிப்படையாக அமையும். மேலும் இந்த பாடல் வரிகள் மற்றும் பாடலில் அணிந்திருக்கும் காவி உடை , பச்சை நிற ஆடைகள் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை வெளியிடலாமா வேண்டாமா என அரசு முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |