தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் வைத்து பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். அதன்படி நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.@Udhaystalin
— Rajinikanth (@rajinikanth) December 14, 2022
இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள twitter பதிவில், வாழ்த்துகிறேன் தம்பி. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதை பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் என்றும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளது. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விஷாலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 14, 2022