தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழகம் எனும் வாழைத்தோட்டத்தில் அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தற்போது புதிய குரங்கு நுழைய இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு திமுக கட்சியில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை உதயநிதி அமைச்சராவதை ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். கருணாநிதி ஸ்டாலினை இப்படித்தான் அமைச்சராக்கினார்.
இதேபோன்று தற்போது ஸ்டாலின் உதயநிதியை அமைச்சராகியுள்ளார். திமுகவில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் சகித்து தான் கொள்கிறார்கள். தமிழகத்தில் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அதிக காற்றால் சிறு சிறு பாதிப்புகள் இருந்த நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். புயலே தாங்களால் நின்றது என்றாலும் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் அரண்மனைக்கு எதிராக எதிர்மனை பேசக்கூடாது. மேலும் ஜனவரி 2-ஆம் தேதி தர்மபுரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார் என்று கூறினார்.