செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அது பெரிய கூட்டணி வைத்துக்கொண்டு… பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து ராவணன் மாதிரி திமுக இருக்காங்க. இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாக இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்நாட்டுல வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணி வைத்து செயல்பட வேண்டும்.
எல்லாக் கட்சியும் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுறாங்க. நான் இபிஎஸ்ஸை சொல்லலையே. அம்மாவுடைய உண்மையான தொண்டர்களை சொல்லுகிறேன். இபிஎஸ் அம்மாவுடைய உண்மையான தொண்டர் இல்லை என்று அவரே நிரூபிக்கிறார், இதைப்பற்றி எடப்பாடி பேச வேண்டிய அவசியமில்லை. அதனால் ஒரு கட்சி எதார்த்த நிலையை சொல்றப்போ, இது வீக்னஸ்… அவரு பலசாலி அப்படின்னு சொன்னீங்கன்னா, அதுக்கு நான் பதில் சொல்ல முடியாது.
ஏற்கனவே நான்கு ஆண்டு எடப்பாடி அவர்களின் திருவிளையாடலை எதிர்த்து, மக்கள் கோவப்பட்டு தான் 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த திமுகவுக்கு, திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். திமுக சொன்ன தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், ஊடகம் வெளிச்சத்தில் இருப்பதாலும், அவர்களை நிறைய பேர் தூக்கிப் பிடிப்பதாளும் இன்றைக்கு ஆட்சியில் ஒரு பெரிய சாதனை செய்பவர்களாகவும் முதலமைச்சர் அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் மிகவும் வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.