கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் குப்பண்ணா (73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க சென்ற 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணாததால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிய நிலையில், குப்பண்ணாவின் வீட்டில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. அந்த சிறுமியை குப்பண்ணா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை முதியவர் வீட்டுக்குள் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர். மேலும் முதியவரின் மீது பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும், சிறுமியின் உறவினர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.