Categories
மாநில செய்திகள்

அடிதூள்!… அமைச்சராக பொறுப்பேற்றதும் உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்சன்…. வரவேற்கும் மக்கள்….!!!!!

தமிழகத்தின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கவர்னர் மற்றும் முதல்வர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்தார். இவர் வெற்றி பெற்றதும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஓர் ஆண்டாக எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனால் உதயநிதி கட்சி பணி மற்றும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார் என அதிரகார்வப்பூர்வ தகவல் வெளியாகியது. தற்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம். அதனை நிறைவேற்றும் அடிப்படையில் நான் செயல்படுவேன்” என்று கூறினார்.

மேலும் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் “எப்போதும் வழி நடத்தும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி, தமிழர் நலன்காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். அத்துடன் பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணிபுரிவேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |