தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார்.ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்த பின்பு 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ( கூட்டுறவுத்துறை), ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் ( பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), கே. ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை), உதயநிதி ஸ்டாலின் ( இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை), ஐ.பெரியசாமி ( ஊரக வளர்ச்சித்துறை),
எஸ்.முத்துசாமி ( வீட்டு வசதி, நகர் புற மேம்பாடு), ஆர். காந்தி ( கைத்தறி, ஜவுளித்துறை), சேகர்பாபு ( இந்து சமய அறநிலைத்துறை, சி.எம்.டி.ஏ), அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ( நிதி, மனிதவளம், புள்ளியல்) , சிவ. மெய்யநாதன் ( சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ), மதிவேந்தன் ( வனத்துறை ) ஆகியோர் பொறுப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.